லண்டனில் ஜாலியாக சுற்றிதிரியும் மடோனா செபாஸ்டியன்.. கிறிஸ்மஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்.!
லண்டனில் ஜாலியாக சுற்றிதிரியும் மடோனா செபாஸ்டியன்.. கிறிஸ்மஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்.!
மலையாளத்தில் முதன் முதலில் பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோனா செபாஷ்டியன். இவர் இந்தப் படத்திற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'பிரேமம்' திரைப்படம் இவருக்கு பெயர் பெற்றது.
இந்தப் படத்திற்கு பின்பு தமிழில் அறிமுகமான மடோனா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'காதலும் கடந்து போகும்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். இப்படத்தில் மடோனாவின் கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் மடோனா, தற்போது லண்டனில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.