விசுவாசம் படத்திற்கு மதுரை காவல்துறை செய்துள்ள சிறப்பை பாருங்கள்! தலான சும்மாவா!
Madurai police shared visuvasam movie poster
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விசுவாசம் திரைப்படத்தில் நடித்துள்ளார் தல அஜித். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் அஜித் நடித்துள்ளார். மூன்று படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் நான்காவது முறையாக சிவாவுடன் அஜித் கூட்டணி சேர்ந்துள்ளதால் விசுவாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் விசுவாசம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது.
விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விசுவாசம் படமும் ஒன்றாக வெளிவருவதால் இந்த பொங்கல் தலைவர் - தல பொங்கல்தான்.
இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மதுரை மாவட்ட காவல் துறை மக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டையலாக் போல புகைப்படத்துடன் செய்தி அனுப்பியுள்ளார்கள். அந்த வாழ்த்து செய்தியை தங்களது facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.