×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகாலட்சுமி மட்டும் அத எடுத்துட்டு வராலன்னா மாமியார் கொடுமை தான்.. கட்டளையிட்ட ரவீந்தர்..! அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே..!!

மகாலட்சுமி மட்டும் அத எடுத்துட்டு வராலன்னா மாமியார் கொடுமை தான்.. கட்டளையிட்ட ரவீந்தர்..! அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே..!!

Advertisement

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரது திருமணம்தான் கடந்த ஒரு வாரமாக மக்களுக்கு பேசுபொருளாகியுள்ளது. மேலும் மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என்றும் விமர்சனம் வந்தது. 

தொடர்ந்து இவர்கள் திருமணத்திற்கு எதிராக வந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் யூடியூப் பேட்டியின் மூலம் பதிலடி கொடுத்தனர். அத்துடன் அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு வந்தனர். தினம் தினம் இப்படி ஏதாவது ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை ரவீந்தர் - மகாலட்சுமி  வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்தர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், "ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மகாலட்சுமி சூட்டிங் செல்ல வேண்டியிருக்கிறது என்றும், காலையிலேயே கிளம்பி சென்றுவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்". அத்துடன் அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பாடு சூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

"சண்டே ஃபேமிலி டைம் என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு வேறு விதமாக உள்ளது. அன்பே வா சூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. பொண்டாட்டி மகாலட்சுமி சங்கர்.. எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு 
திரும்பிகொண்டு வந்துவிடு. 

இல்லையென்றால் மாமியார் கொடுமை மட்டுமின்றி, அம்மா என்னை டன்சோவில் சேர்த்து விடுவார் என ரவிந்தர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே..மாமியார் கொடுமை எல்லாம் நடக்குதா? என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mahalatsumi #Ravindar #surprise #tamil cinema #மகாலட்சுமி #ரவீந்தர் #காதல் திருமண ஜோடி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story