திருமணத்திற்கு பிறகு நடிகை ஆர்யா கொடுத்த செம ட்ரீட்.! குவியும் வாழ்த்துக்கள்!!
mahamuni movie teaser released
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான டெடி என்ற படத்தில் நடித்து வந்தார். பின்னர் மௌனகுரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாந்தகுமார் இயக்கத்தில் உருவான மகாமுனி ,படத்திலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்து படம் வெளியிடுவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா,ஜெயபிரகாஷ், இளவரசு, அருள்தாஸ், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர.
மேலும் முழுவதும் அரசியலை மையமாக கொண்ட இப்படத்தில் மனிதர்களின் குணாதிசயங்கள் சிலவற்றை விவரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் மகாமுனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.