"உன்னைத்தாண்டித்தான் எனக்கு எதுவுமே" - காவேரிக்கு பச்சைக்கொடி காட்டிய மகாநதி விஜய்.!
உன்னைத்தாண்டித்தான் எனக்கு எதுவுமே - காவேரிக்கு பச்சைக்கொடி காட்டிய மகாநதி விஜய்.!
மனதளவில் விஜய், காவேரி இணைந்துவிட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி நெடுந்தொடரில், முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாமிநாதன், லட்சுமி ப்ரியா, பிரதீபா, ஆதிரை, ருத்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மிகவும் பிரபலமான தொடர்களில் மகாநதி முக்கிய இடம் பெற்றுள்ளது.
மனதளவில் சேர்ந்துவிட்டனர்
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விஜயும் - காவேரியும் மனதளவில் ஒன்று சேர்ந்துவிட்டனர். இந்த ஒரு முடிவை எதிர்பார்த்தே மகாநதி ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "ரோஷம் இருக்கா? எங்க வீட்டு உப்பையும் சேர்த்து தின்னுங்க" - தர்ஷிகா கிளப்பிய புயல்.. கடுப்பில் அந்த 2 போட்டியாளர்கள்.!
வில்லி பகீர் செயல்
விஜய் காவேரிக்காக கடிதம் ஒன்றையும் மனம்திறந்து எழுதி வைத்துள்ள நிலையில், வில்லி ராகினி அதனை கிழித்து விடுகிறார். இவர்கள் இருவரும் தங்களின் காதலால், கடிதம் கிடைக்காவிட்டாலும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா வெளியிட்டது.!