கீர்த்தி சுரேஷ் முதுகில் கியூட்டாக சாய்ந்திருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்! என்ன விஷயம் தெரியுமா?? தீயாய் பரவும் போஸ்டர்!
கீர்த்தி சுரேஷ் முதுகில் கியூட்டாக சாய்ந்திருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர்! என்ன விஷயம் தெரியுமா?? தீயாய் பரவும் போஸ்டர்!
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரிபாட்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் மே மாதம் திரைக்கு வரஉள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் இருந்து பாடல் ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் முதுகில் சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.