தளபதி 66 சூப்பர் அப்டேட்! விஜய்யின் மகளாக நடிக்கும் மெகா ஸ்டாரின் மகள்! யார்னு பார்த்தீர்களா!!
தளபதி 66 சூப்பர் அப்டேட்! விஜய்யின் மகளாக நடிக்கும் மெகா ஸ்டாரின் மகள்! யார்னு பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கின் பிரபல இயக்குனரான வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி 66 வது படமான இதனை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக உள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் தளபதி 66 படம் அப்பா மற்றும் மகளுக்கான கதையாக இருக்கும் எனவும், விஜய்யின் மகளாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.