என் மகனோட மைண்ட் வாய்ஸ்! மைனா நந்தினி வெளியிட்ட கியூட் வீடியோ! குவியும் லைக்ஸ்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த தொடரின் மூலம் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதனை தொடர்ந்து மைனா நந்தினி பல தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் என்ற தொடரில் நடித்து வருகிறார். மைனா நந்தினி சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சீரியல் நடிகர் யோகேஸ்வரனுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு துருவன் என்ற அழகிய மகன் உள்ளான். இந்நிலையில் நந்தினி இன்ஸ்டாகிராமில், தனது மகன் துருவன் வேலைக்காரன் சீரியலில் தான் நடிக்கும் காட்சியை டிவியில் பார்க்கும் கியூட் வீடியோவை பகிர்ந்து அதில், இது ஒரு அன்பான தருணம். என் மகன் என் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனோட mind voice என்னன்னா? யாருப்பா இந்த பொண்ணு அம்மா மாதிரியே இருக்கு... என் மகன் துருவனுக்கு நன்றி என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.