செம்ம க்யூட் வீடியோ! நடிகை மைனா அவரது கணவருடன் சேர்ந்து செய்துள்ள லூட்டியை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
Maina video
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் மைனா என்கிற நந்தினி. இவர் அந்த தொடரில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.
அதன் பிறகு மைனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் சிறிது காலம் நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு மீண்டும் சீரியல், திரைப்படம் என்று நடிக்க துவங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நந்தினி நாயகி தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் நிச்சயம் செய்துகொண்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி அன்று அவர்கள் செய்த டிக்டாக் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.