திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.!
திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.!
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை மலைக்கா அரோரா. இவரும், நடிகர் அர்ஜுன் கபூரும் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவே கிசுகிசுக்கப்பட்டது.
கிசுகிசுப்பை உறுதிசெய்யும் பொருட்டு அவ்வப்போது ஒன்றாக பயணித்து வரும் இருவரும், நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றே பதில் தெரிவித்தனர்.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்யப்போவதாக வதந்தி பரவிய நிலையில், தற்போது நடிகை மலைக்கா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதனால் கொந்தளித்துப்போன நடிகர் அர்ஜுன் கபூர், "இவ்வாறான அவதூறு செய்திகளை பதிவிடாதீர்கள். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் விளையாட வேண்டாம். நாங்கள் நண்பர்கள்" என்று தெரிவித்தார்.