47 வயதில் குழந்தை பெற்றெடுத்த தாய்.! 23 வயதில் அக்காவான பிரபல சீரியல் நடிகை!! நிஜமான வீட்ல விஷேசமுங்க..
47 வயதில் குழந்தை பெற்றெடுத்த தாய்.! 23 வயதில் அக்காவான பிரபல சீரியல் நடிகை!! நிஜமான வீட்ல விஷேசமுங்க..
மலையாள சீரியல் நடிகை ஆர்யா பார்வதி. அவருக்கு தற்போது 23 வயதாகிறது. அவர் பள்ளி படிப்பை வீட்டில் தங்கியபடி முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டார். பின்னர் படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய அவர் நடனம், மாடலிங் போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
அதனை தொடர்ந்து அவர் நடிகையாகவும் மாறினார். இந்த நிலையில் நடிகை ஆர்யா பார்வதி சில காலங்களுக்கு முன் தனது 47வயது நிறைந்த தாய் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது அவருக்கு கேரளாவில் தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை நடிகை ஆர்யா பார்வதி செம மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிறந்த குழந்தையை தூக்கி கொஞ்சும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட இந்த நெட்டிசன்கள் தமிழில் வெளிவந்த வீட்ல விசேஷங்க படம் போன்று இருப்பதாக கூறி வருகின்றனர்.