ஊரடங்கில் முழு விவசாயியாக மாறிய சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படத்தால் வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!
Malaiyala superstar Mohanlal organic farming in home
மலையாள சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மோகன்லால் எப்போதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர்.
உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிடுவது, விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என ஆக்டிவாக இருப்பார். மேலும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை வீட்டில் தங்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு சென்ற அவர் அங்கு தனது வீட்டிற்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் தீவிரமாக விவசாயம் மேற்கொண்டு வருகிறார். அங்கு தற்போது வாழை மற்றும் காய்கறிகள் விளைந்துள்ளது. இந்த புகைப்படங்களை மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.