மலையாள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்கவரும் மற்றுமொரு நடிகை .! எந்த படத்தில் தெரியுமா.?
மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு நடிக்கவரும் மற்றுமொரு நடிகை .! எந்த படத்தில் தெரியுமா.?
2017ம் ஆண்டு வெளியான "தொண்டிமுத்தலும் த்ரிஷாக்ஷியும்" என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மலையாளப்படங்களிலும், ஒரு மராத்தி படத்திலும் நடித்துள்ளார் நிமிஷா.
இந்நிலையில், இந்த வாரம் தமிழில் வெளியாகும் திரைப்படம் "சித்தா". இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் ஒரு துப்புரவுப் பெண் தொழிலாளி கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் நிமிஷாவின் நடிப்பு, பார்ப்பவர்கள் மிரளும் வகையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து நிமிஷா தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்றும், தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்றும், அவருக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
"சித்தா" படத்தை அடுத்து, "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" படத்திலும் நிமிஷா நடித்துள்ளார். மும்பையில் வளர்ந்த நிமிஷா தமிழில் சரியாகப் பேசாமல் உள்ளார். இவர் விரைவில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.