"மாமன்னன் படத்தின் உதவி இயக்குனர் மரணம்.! புகை பிடிக்கும் பழக்கத்தால் நேர்ந்த சோகம்!"
மாமன்னன் படத்தின் உதவி இயக்குனர் மரணம்.! புகை பிடிக்கும் பழக்கத்தால் நேர்ந்த சோகம்!
ஒவ்வொரு நாளும் சினிமா ஆசையோடும், கனவுகளோடும் ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்தவண்ணம் உள்ளனர். அவர்களில் எல்லோருமே நல்ல புகழ் வெளிச்சத்தைப் பெறுவதில்லை. சிறிது அதிர்ஷ்டமும் கை கொடுத்தால் மட்டுமே சிலர் வெற்றி பெறுகின்றனர்.
அந்தவகையில் சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்தவர்களில் ஒருவர் தான் மாரிமுத்து. இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த "கர்ணன்" படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும் அந்தப் படத்தில் சில காட்சிகளிலும் நடித்திருந்தார்.
இதையடுத்து உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்து மாபெரும் வெற்றியடைந்த "மாமன்னன்" படத்திலும் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மாரிமுத்து தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியங்குடி கிராமத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து நெல்லை மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது, வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 30 வயாதான மாரிமுத்துவுக்கு அளவுக்கதிகமான புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததே மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.