மாமன்னன் திரைப்படத்திற்கு தடை.. உயர்நீதிமன்ற வழக்கால் பரபரப்பு.?
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை.. உயர்நீதிமன்ற வழக்கால் பரபரப்பு.?
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகராக வலம் வருபவர் உதயநிதி. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடந்த முடிந்தது. இந்த விழாவில் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்தை குறித்து பல கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.
மேலும் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் மாரி செல்வராஜ் தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'மாமன்னன்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், 'மாமன்னன்' திரைப்படம் ஜாதியை மையமாக வைத்து வன்முறையை கிளப்பும் விதமாக உள்ளது. மேலும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக இப்படத்தில் காட்சிகள் அமைந்துள்ளது. இதனால் மாமன்னன் திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது