நடிகையின் முன் ஆபாச சேட்டை; காமுகனுக்கு கேரளா ஆண்கள் சங்கம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.. சர்ச்சை..!
நடிகையின் முன் ஆபாச சேட்டை; காமுகனுக்கு கேரளா ஆண்கள் சங்கம் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு.. சர்ச்சை..!
கேரளா மாநிலத்தில் பேருந்தில் பயணம் செய்த நடிகை ஒருவர் முன்பு, இளைஞர் ஆபாச செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், வழக்கில் சிக்கிய இளைஞர் சிறைக்கு சென்று மீண்டும் ஜாமினில் வெளியே வந்த நிலையில், அவருக்கு கேரளா ஆண்கள் சங்கத்தினரி என்ற பெயரை சேர்ந்தவர்கள் மாலை, மரியாதையோடு வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.
மேலும், நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எந்த வழக்கானாலும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். பயப்பிடாமல் இருங்கள்" என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.