அட..இப்படியொரு மனுஷனா! கண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ! தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா??
மும்பை அருகே வாங்கனி என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையற்ற பெண்ணுடன் நடந்
மும்பை அருகே வாங்கனி என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையற்ற பெண்ணுடன் நடந்து சென்ற 6 வயது சிறுவன் தண்டவாளத்தில் தவறி விழுந்தான். அப்பொழுது அவர்களுக்கு எதிர்பக்கம் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் தவித்த நிலையில் அங்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த ரயில்வே பாயிண்ட்மேன் மயூர் ஷெல்கே ஓடிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் சிறுவனை தூக்கி பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு தானும் ஏறினார்.
சிலநொடிகள் தாமதித்து இருந்தாலும் மயூர் ஷெல்கே ரயில் மோதி இறந்திருக்கக்கூடும். இந்நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனின் உயிரை காப்பாற்றிய அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் மயூர் ஷெல்கேயின் துணிச்சலான சேவையைப் பாராட்டி ரயில்வே நிர்வாகம் ரூ50 ஆயிரம் பரிசுத் தொகையும், ஜாவா நிறுவனம் ஒரு புதிய இருசக்கர வாகனத்தினையும் பரிசாக வழங்கியது. இந்த நிலையில் மயூர்ஷெல்கே தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் பாதியை தான் காப்பாற்றிய சிறுவனின் நலனுக்காகவும், படிப்பு செலவுக்காகவும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது