அமெரிக்கா வந்தும் இதுதான் நிலைமையா..? புலம்பும் மணிமேகலை.!
அமெரிக்கா வந்தும் இதுதான் நிலைமையா..? புலம்பும் மணிமேகலை.!
சின்னத்திரை தொகுப்பாளினியாக வளம் வருபவர் மணிமேகலை. இவரை நடிகை, தொகுப்பாளினி, சமூகவலைத்தள பிரபலம் என்று பல கோணத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.
ஆரம்பகாலகட்டத்தில், ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின் நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக கலந்து கொண்டு, மக்கள் மனதில் தனக்கான இடத்தினை பிடித்து கொண்டார்.
பின், அதே தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களிடையே தனக்கான இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.
அதன்பின்னர், சமூகவலைத்தளத்தில் வீடியோக்கள் பதிவிடுவது என்று பிஸியாகவே இருக்கிறார். சமையல் நிகழிச்சியில் இருந்து விலகினாலும், இன்னும் மக்களிடையே அவர் ட்ரெண்டிங் தான்.
இந்நிலையில், தற்போது மணிமேகலை மற்றும் கலக்கப்போவது யாரு பாலா இருவரும் ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள். அங்கு தெருவில் அமர்ந்து சாம்பார் சாதம் சாப்பிடுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.