விமானி அபிநந்தனின் தந்தை மணிரத்தினம் படத்தில் பணியாற்றியவரா வெளியான சுவாரசிய தகவல்.!
manirathnam - karru valiedai - simmakkutti varththaman
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இந்திய விமானப்படை குறித்து படக்குழுவுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பாலக்கோடு விமானப்படை தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிபட்டவர் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன். அவரை பாகிஸ்தானிலிருந்து பத்திரமாக இந்தியா மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் அவருடைய தந்தை சிம்மக்குட்டி வர்த்தமானும் இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாக பணிபுரிந்தவர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இயக்குனர் மணிரத்தின் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தில் இந்திய விமானப்படையில் பணிபுரிபவராக நடித்த கார்த்திக்கு இந்திய விமானப்படை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் அப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி உள்ளார்.
நிகழ்ச்சியில் பேசும்போது இந்திய விமானப்படை வீரரின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டு உருவான காற்று வெளியிடை போன்ற வித்யாசமான படங்கள் தொடர்ந்து வர வேண்டும். வீரர்களின் கடினமான வாழ்க்கை உலகுக்கு இதன்மூலம் தெரிய வரும் என்றார்.