பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பணியாற்றாதது இதனால்தானா?? இயக்குனர் மணிரத்னம் கூறிய விளக்கத்தை பார்த்தீங்களா!!
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பணியாற்றாதது ஏன்?? இயக்குனர் மணிரத்தினம் கூறிய விளக்கத்தை பார்த்தீங்களா!!
மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படம் இரு பாகங்களாக உருவாகிறது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, விக்ரம், அருண்மொழி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் மற்றும் பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் எடுக்கவுள்ளார் என்ற பேச்சு துவங்கிய ஆரம்பத்திலேயே அதில் வைரமுத்து பணியாற்றுவார் என பல தகவல்கள் பரவி வந்தது. ஆனால் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நடிகரும் எழுத்தாளருமான இளங்கோ குமார் எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் மணிரத்னத்திடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பிய போது அவர், வைரமுத்துவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிவிட்டோம், பல புதிய திறமையாளர்கள் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்திற்கு புது எழுத்தாளரை பயன்படுத்த விரும்பிதான் வேறு நபர்களை பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.