விக்ரம் படத்தால் புலம்பும் மணிரத்தினம்.! அதை பண்ணிருக்கவே கூடாது.!
விக்ரம் படத்தால் புலம்பும் மணிரத்தினம்.! அதை பண்ணிருக்கவே கூடாது.!
கடந்த 2004 ஆம் வருடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில், தமிழில் ஆயுத எழுத்து எனவும், ஹிந்தியில் யுவா எனவும் வெளியிடப்பட்ட திரைப்படத்தின் மூலமாக, இரு மொழிகளிலும் இயக்குனராக களம் கண்டார் மணிரத்தினம். ஆனாலும், கடந்த 2010 ஆம் வருடம் அவர் இயக்கிய ராவணன் திரைப்படத்தில் இந்த யுத்தியை அவர் கையாண்ட போது, அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழில் ராவணன் என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், இந்தியில் ராவன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அவர் இயக்கி, இணைந்து தயாரித்த ராவன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கோவிந்தா, நிகில் திவேதி, ரவி கிஷன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் மூலமாக, ஹிந்தி திரையுலகிற்கு முதன்முறையாக விக்ரம், பிரியாமணி உள்ளிட்டோர் அறிமுகமாயினர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும், ஏ.ஆர்.ரகுமான் இசை, குல்ஜாரின் பாடல் வரிகள் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது.