நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! இன்று விசாரணைக்கு ஆஜராகாத மன்சூர் அலிகான்.! விளக்கம் அளித்து கடிதம்!!
நடிகை திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! இன்று விசாரணைக்கு ஆஜராகாத மன்சூர் அலிகான்.! விளக்கம் அளித்து கடிதம்!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை திரிஷாவும், இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மனிதக் குலத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் மன்சூர் அலிகான், நான் தவறாக எதுவும் பேசவில்லை என மன்னிப்பு கேட்க மறுத்தார். இந்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. மேலும் ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் அவர் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.