" ஒரே நாடு ஒரே வெங்காயம் என்று சொல்லாதீங்க" காவிரி பிரச்சினையில் கடுப்பான மன்சூர் அலிகான்..
ஒரே நாடு ஒரே வெங்காயம் என்று சொல்லாதீங்க காவிரி பிரச்சினையில் கடுப்பான மன்சூர் அலிகான்..
தமிழ் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து தற்போதுவரை பல வில்லன் நடிகர்கள் வந்து போய்க்கொண்டு உள்ளனர். அவர்களில் ஒரு சிலரே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
அந்த வகையில், 90களில் ஆரம்பாங்களில் இருந்து தன் மிரட்டலான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்து வந்தவர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடித்த "கேப்டன் பிரபாகரன்" திரைபடத்தில் மிரட்டலாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்த மன்சூர் அலிகான், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பொதுமக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார் மன்சூர் அலிகான்.
இதன்படி தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்து கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து மன்சூர் அலிகான், " தண்ணிரை சொந்தம் கொண்டாடுவதற்கு இவர்கள் யார் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் என்றால் ஒரே நாடு ஒரே வெங்காயம்ன்னு எதுக்கு பேசணும்" என்று காட்டமாக பேசியிருக்கிறார். இவரின் பேச்சு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.