"அதாம்ல வர்கீஸ்..." சரியாக 100 நாள்... தேசிய கீதம் பாடி... மன்சூர் அலிகான் சரக்கு படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!
அதாம்ல வர்கீஸ்... சரியாக 100 நாள்... தேசிய கீதம்... மன்சூர் அலிகான் சரக்கு படத்தின் அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக விளங்கி வந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி ஹீரோ, காமெடி நடிகர், அரசியல்வாதி என பல பரிணாமங்களை கொண்டவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு தளபதி விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜயின் ஆரம்ப காலக்கட்ட திரைப்படங்களில் அவருக்கு மெயின் வில்லனாக இவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இவரை நீண்ட நாட்களாக தனது படத்தில் நடிக்க வைக்க நினைத்திருந்தார். அது தற்போது லியோ திரைப்படத்தின் மூலம் நடந்திருக்கிறது.
லியோ திரைப்படத்திற்கு முன்பாக ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கும் சரக்கு என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா ப்ரின்ஸ் என்பவர் நடித்தார். மேலும் இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், பயில்வான் ரங்கநாதன், கிங்ஸ்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களை பாடாய்படுத்தும் மதுவின் தீமைகளை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் கொண்ட மன்சூர் அலி கான் இந்த படப்பிடிப்பின் போது தனது பிறந்த நாளை பலாப்பழம் வெட்டி கொண்டாடினார். இந்த செய்தி வெளியாகி தமிழ் திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் வித்தியாசமான முறையில் அதனை நிறைவு செய்து இருக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை சரியாக 100 நாட்களில் நடத்தி முடித்ததோடு நிறைவு விழா அன்று தேசிய கீதம் பாடி திரைப்படத்தின் நிறைவு செய்திருக்கிறார் மன்சூர் அலிகான். இது திரை உலகிநர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.