×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்போ சொல்கிறேன்.. நடிகை திரிஷா விவகாரம்.! மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

அடக்க நினைத்தால் அடங்கமறு.. இப்போ சொல்கிறேன்.. திரிஷா விவகாரம்.!மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!

Advertisement

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர்அலிகான் பேசியது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு காவல் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நேற்று போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்தார். இந்த நிலையில் இன்று மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், 
ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும், பணிவான வணக்கங்கள். 

கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சையை தழுவினான். ஆம்  மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! 

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்..
என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mansoor Ali Khan #trisha #abology
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story