×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! பிரபல நடிகர் அதிரடி கைது!! பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்!!

marathi actor arrest for sex abuse 17 year child

Advertisement

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் மந்தர் குல்கர்னி. நடிகரும், இயக்குனருமான அவர் நடிகர் மற்றும் நடிகைகளை உருவாக்குவதற்காக  நாடக வொர்க்க்ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார். 

அங்கு பலரும் பயின்றுவரும் நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவர் நடிப்பு கற்றுக்கொள்வதற்காக வொர்க்க்ஷாப்பிற்கு வந்துள்ளார். அவர் மீது மந்தர் குல்கர்னிக்கு தவறான கண்ணோட்டம் ஏற்பட்ட நிலையில், அந்த சிறுமியிடம்  நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக  ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் அதற்காக சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனக்கூறி தனது வீட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

இந்நிலையில் அவரை நம்பி சென்ற சிறுமிக்கு அவர் ஆடைகளை கொடுத்து அணிந்து வருமாறு கூறியுள்ளார்.பின்னர் பிகினி உடையில் வருமாறும் அந்த சிறுமியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அனைத்து ஆடைகளையும் அணிந்து வந்து சிறுமியை மந்தர் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அவரிடம் தவறான முறையில் நடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சிறுமி அங்கு நடந்த அனைத்தையும்  தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் மந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sex abuse #maratthi actor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story