100 கோடி வசூலை அள்ளிய மார்க் ஆண்டனி.! இயக்குனருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த வேற லெவல் காஸ்ட்லி சர்ப்ரைஸ்!!
100 கோடி வசூலை அள்ளிய மார்க் ஆண்டனி.! இயக்குனருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த வேற லெவல் காஸ்ட்லி சர்ப்ரைஸ்!!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் அமேசான் பிரைம் தளத்தில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
மார்க் ஆண்டனி படம் உலகளவில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்நிலையில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலையுயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபிள்யூ. காரை பரிசாக வழங்கி இருக்கிறார். அவருக்கு இயக்குனர் நன்றி தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.