ஆத்தாடி! இப்படி வளைச்சு வளைச்சு சுத்துறாங்களே! செம கெத்துதான்! ஜாங்கிரி மதுமிதாவை கண்டு மிரண்டுபோன ரசிகர்கள்!
Mathumitha learned silampam photo viral

தமிழ் சினிமாவில் உதயநிதி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என காமெடி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை மதுமிதா. இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் இவர் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகை மதுமிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால், தற்கொலை முயற்சி செய்து பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மதுமிதா சமீபத்தில் டிரைவிங் கற்றுக் கொண்டதாக கூறி பைக் மற்றும் கார் ஓட்டிய புகைப்படங்களை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது நடிகை ஜாங்கிரி மதுமிதா சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் அந்த வீடியோவையும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இது ஆரம்பம்தான். இன்னும் இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.