மே1.. சும்மா தெறிக்க விடலாமா!! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து! மிஸ் பண்ணிடாதீங்க!!
மே1.. சும்மா தெறிக்க விடலாமா!! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து! மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டிப் பறப்பவர் அஜித் குமார். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாவைப் போல கொண்டாடுவர்.
இறுதியாக அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வலிமை. ஹெச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது. மேலும் அதனைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று நடிகர் அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வலிமை திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.