×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. எம்புட்டு அழகு! மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளுடன் இருக்கும் பிரபல தமிழ் நடிகை! கண்ணுபடவைக்கும் கியூட் புகைப்படம்!

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகை மீனாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் ரஜினி,கமல் என பல பிரபலங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவி தமிழ் மட்டுமின்றி கன்னடம்,  மலையாளம், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்ரீதேவி கடந்த 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். தாய் மறைவிற்குப் பின்பு கதாநாயகியாக களமிறங்கிய ஜான்வி கபூர் தடக், குஞ்சன் சக்சேனா ஆகிய  படங்களில் நடித்துள்ளார். மேலும் விளம்பரங்கள், போட்டோ சூட்  எனவும் செம பிசியாக உள்ளார். 

மேலும் இவரது தந்தை தமிழில் பல படங்களை இயக்கி வரும் நிலையில், நடிகை ஜான்வி கபூரும் தென்னிந்திய சினிமாவில் நடிப்பார் என பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meena #Janvi kapoor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story