மாஸ்டர், வலிமை போன்ற படங்கள் கொண்டாடப்பட வேண்டியவை.. ஆன்லைனில் வெளியிட கூடாது - இயக்குனர் மோகன்!
mogan requests not to release master and valimai in OTT
மாஸ்டர், வலிமை போன்ற படங்களை OTT மூலம் ஆன்லைனில் வெளியிட கூடாது என்றும் இதுபோன்ற படங்கள் கொண்டாடப்பட வேண்டியவை எனவும் இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றை சமாளிக்க நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தினை OTT மூலம் ஆன்லைனில் வெளியிடப்போவதாக அறிவித்தனர். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் உருவான காஞ்சனா படத்தின் ரீமேக்கான லட்சுமி பாம் திரைப்படம் OTT மூலம் ஹாட்ஸ்டார் மற்றும் டிசினியில் ஜூன் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் அரிவித்துள்ளனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் மற்றும் அஜித்தின் படங்களான மாஸ்டர் மற்றும் வலிமை அணைத்து வேலைகளும் முடிந்து வெளியாகும் நிலையில் உள்ளன. இந்த படங்களும் ஆன்லைனில் வெளியிட்டுவிடுவார்களோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.
இதனால் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் லட்சுமி பாம் படம் OTT மூலம் ஆன்லைனில் வெளியிட்டாலும் மாஸ்டர், வலிமை போன்ற படங்களை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும். இந்த படங்கள் வெறுமனே உட்கார்ந்து பார்ப்பதற்காக எடுக்கப்பட்டது அல்ல மாறாக கொண்டாடப்பட வேண்டிய படங்கள் அவை. மேலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் OTT ஆன்லைனை விட தியேட்டரில் வெளியிடுவதையே ஆதரிக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.