சினிமா தான் இதற்கு ஒரு முக்கிய காரணம் - இயக்குனர் மோகன் ஜி ஆவேசம்.!
சினிமா தான் இதற்கு ஒரு முக்கிய காரணம் - இயக்குனர் மோகன் ஜி ஆவேசம்.!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கஞ்சா போதையில் மயக்கத்தில் கீழே விழுந்த சம்பவம் குறித்து இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கஞ்சா மற்றும் உயர்தர போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வருகிறது.
இதில், சில போதையில் அடாவடி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரக்கோணம் அருகே மாணவர்கள் இரண்டு பேர் கஞ்சா போதையில் நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு கீழே விழுந்து கிடக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போதையில் தள்ளாடிய மாணவர்கள் குறித்து திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நாளைய தமிழ்நாடு, தமிழ் சினிமாவும் இதற்கு ஒரு முக்கிய காரணம்' என தெரிவித்துள்ளார்.