மோகன்லாலின் பாரோஸ் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மோகன்லாலின் பாரோஸ் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆசிர்வாத் சினிமாஸ், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மோகன்லால் இயக்கி, நடித்து உருவாகியுள்ள திரைப்படம் Barroz Guardian of Treasures.
இப்படம் 28 மார்ச் 2024 அன்று உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரோஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திதிரைப்படம், 3டி முறையில் உருவாகிறது.
மார்க் கில்லியன், லிடியன் நாதஸ்வரம் ஆகியோர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சி, சென்னை, கோவா, பேங்காங் பகுதிகளில் நடைபெற்றது.
படத்தில் மோகன்லால், குரு சோமசுந்தரம், சீசர் லோரென்ட், கல்லிரோ, கோமல் சர்மா, பத்மாவதி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.