தன் கையால் ஸ்பெஷல் சிக்கன் சமைத்து, மனைவியை அசரவைத்த சூப்பர் ஸ்டார்! ரசிகர்களை வாயடைக்க வைத்த வீடியோ!!
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வரு
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால். 40 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோவாக வலம் வரும் இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் மோகன்லால், அவ்வப்போது தனது படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நடிகர் மோகன்லால் தனது வீட்டில் ஸ்பெஷல் சிக்கன் சமைத்துள்ளார். மேலும் முழுவதும் தனது கையால் சமைத்த அந்த உணவின் ரெசிபியையும் அவர் பகிர்ந்துள்ளார். பின்னர் சமைத்து முடித்த பின்பு அவர் தனது மனைவியையும், மகனையும் அழைத்து அதனை ருசி பார்க்க கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.