மோகன்லால் மகனும் சிம்பு பட நடிகையும் ரகசிய காதலா.. இணையத்தில் பரவும் புகைப்படம்.?
மோகன்லால் மகனும் சிம்பு பட நடிகையும் ரகசிய காதலா.. இணையத்தில் பரவும் புகைப்படம்.?
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து அறியப்படும் நடிகையாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெறவில்லை.
இதன் பிறகு தமிழில் சிம்புவுடன் 'மாநாடு' திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சிம்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தார்.
இதுபோன்ற நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலின் மகனான பிரணவ் மற்றும் கல்யாண பிரியதர்ஷன் இருவரும் காஷ்மீரில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலர் கமெண்ட் செய்து வந்தனர்.
இதனைக் குறித்து மோகன்லாலிடம் கேட்கப்பட்டபோது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள் யாரும் தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்று கோபமாக கூறினார்.