×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் அதர்வா மீது இப்படியொரு மோசடி வழக்கா! தயாரிப்பு நிறுவனத்தின் அதிரடி புகாரால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

money fraud complaint on adharvaa

Advertisement

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. அதனை தொடர்ந்து அவர் முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி,  இரும்புகுதிரை, ஈட்டி, கணிதன்,  இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல முன்னணி நடிகர் முரளியின் மகன் ஆவார் 

இந்நிலையில் நடிகர் அதர்வா மீது 6 கோடி பணம் மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எக்ஸ்ட்ரா என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

 அந்த புகாரில் அவர், நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த செம போத ஆகாதே என்ற படத்தின் விநியோக உரிமையை 5.5 கோடிக்கு அதர்வாவிடம் இருந்து பெற்றேன். ஆனால் படம் வெளியாக தாமதம் ஏற்பட்ட நிலையில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்து  அதர்வாவிடம் கேட்ட நிலையில் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை.

மேலும் சில நாட்களுக்குப் பிறகு அந்த நஷ்டத்துக்கு ஈடாக தான் மின்னல் வீரன் என்ற படத்தில் நடித்து தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அந்த படத்தை முடித்து தராமல் அவர் ஏமாற்றிவிட்டார். அதற்காகவும் நான் 50 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். இந்நிலையில் அதர்வாவால் எனக்கு ஆறு கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். மேலும் இந்த பணம் குறித்து அவரிடம் கேட்டபோது மூன்று மாதத்தில் பணத்தை தருவதாக கூறி, ஒரு வருடமாகியும் அவர் பணத்தை தரவில்லை என புகார் அளித்துள்ளார்.மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#adharvaa #complaint #money
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story