2018-ல் அதிக படங்களில் நடித்த தமிழ் நடிகர்! 2019-லும் இவர்தான் நம்பர் ஒன்!
most film actor in 2018
தமிழ் ரசிகர்களால் 'மக்கள் செல்வன்' என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை எளிதில் கவரும் திறமையை கொண்டவர். 2018ம் ஆண்டில் மட்டும் இவர் 7 படங்களில் நடித்து, அந்த ஆண்டில் அதிகமான படங்கள் நடித்தவர் ஆவார்.
தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி தான். தன்னுடைய எதார்த்தனமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவரும் திறன் வாய்ந்த ஒரே நடிகர் என்ற பெயர் இவரைத் தான் சேரும். சமீபத்தில் "மகா நடிகன்" என்று சூப்பர்ஸ்டார் ரஜினியால் அழைக்கப்பட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5 க்கும் அதிகமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
2018ம் ஆண்டில் மட்டும் இவர் நடித்த ஏழு படங்கள் வெளியாகின. அவை:
1. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
2. ஜூங்கா
3. டிராபிக் ராமசாமி
4. 96
5. இமைக்க நொடிகள்
6. செக்க சிவந்த வானம்
7. சீதக்காதி
மேலும் இந்த ஆண்டிலும் பேட்ட, சூப்பர் டிலக்ஸ் உள்ளப்பட 7 படங்கள் வெளியாக உள்ளதால் 2019 ஆம் ஆண்டும் இவர் தான் அதிக படங்களில் நடித்த நடிகர் என்ற பெயரை தட்டிச் செல்வர் என்று கோலிவுட் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.