×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தின் ரகசிய உறவை அம்பலபடுத்திய திரைப்பட விமர்சகர்..? கடும்கோபத்தில் அஜித் ரசிகர்கள்.!?

அஜித்தின் ரகசிய உறவை அம்பலபடுத்திய திரைப்பட விமர்சகர்..? கடும்கோபத்தில் அஜித் ரசிகர்கள்.!?

Advertisement

கோலிவுட் திரையுலகில் முண்ணனி நட்சத்திரமாக இருப்பவர் அஜித் குமார். இவரை அல்டிமேட் ஸ்டார் அஜித் என்றும் தல என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்படுவதுண்டு. இவரை வைத்து திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குநர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஆரம்ப காலத்தில் சினிமா வாழ்க்கையில் மிகவும் சிரமத்தை சந்தித்த அஜித் முதன்முதலில் 1992 ஆம் வருடம் 'அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதன்பின் பாசமலர்கள், பவித்ரா, ராசாவின் பார்வையிலே போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அஜித்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை அளிக்கவில்லை.

அதே நிலையில், 1995ஆம் வருடம் வெளியான 'ஆசை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து காதல் மன்னன், காதல் கோட்டை, வாலி, அமர்க்களம் வரலாறு, பில்லா, மங்காத்தா என பல வெற்றி படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்து வந்தார். இதன்படி அமர்க்களம் படத்தில் இவருடன் நடித்த கதாநாயகியான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நிலையில், சமீபத்தில் பிரபலமான திரைப்பட விமர்சகர் உமர் சந்த் ட்விட்டரில் அஜித்தை பற்றி பதிவிட்டுள்ளார். அதில் அஜித் ரகசிய உறவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிக்காத அஜித்தை பற்றி இவ்வாறு அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருப்பதற்கு சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #Shalini #ரகசிய உறவு #பட விமர்சகர் #ட்விட்டர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story