இதுவரை தீபாவளிக்கு வெளியாகிய படங்களின் தொகுப்பு; அனைத்து சாதனைகளையும் முறியடிக்குமா சர்க்கார்!
movies for diwali list
தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு தீபாவளியன்று வெளியாகி வெற்றிபெற்ற படங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு. இதுவரை தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் அனைத்து சாதனைகளையும் சர்க்கார் முறியடிக்குமா என்பதை பார்க்கலாம்:
2000:
அக்டோபர் 26 ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி தினத்தன்று கமல் நடிப்பில் தெனாலி, விஜய் நடிப்பில் பிரியமானவளே, மற்றும் அர்ஜுன் நடிப்பில் வானவில் ஆகிய படங்கள் வெளியாகின. அந்த ஆண்டு வெளியான படங்களில் தெனாலி அதிகபட்சமாக 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
2001:
நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி தினத்தன்று தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் ஷாஜகான், விஜயகாந்த் நடிப்பில் தவசி, விக்ரம் நடிப்பில் காசி, சூர்யா நடிப்பில் நந்தா, மற்றும் கமல் நடிப்பில் ஆளவந்தான் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த படங்களில் ஷாஜகான் மற்றும் தவசி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அபார வெற்றி பெற்றது. காசி மற்றும் நந்தா திரைப்படங்கள் விக்ரம் மற்றும் சூர்யாவின் நடிப்பிற்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கமலஹாசனின் நடிப்பு வீணானது.
2002:
நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி தினத்தன்று புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த ரமணா மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த வில்லன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின. இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.
2003:
அக்டோபர் 25-ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி தினத்தன்று இளையதளபதி விஜய் நடித்த திருமலை மற்றும் சூர்யா விக்ரம் இணைந்து நடித்த பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. முதல் முதலில் அதிரடியாக விஜய் நடித்த திருமலை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விக்ரம் மற்றும் சூர்யாவின் நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது. இந்த இரண்டு படங்களுமே அந்த வருடம் நல்ல வசூலை பெற்று வெற்றி அடைந்தது.
2004:
நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட்ட அந்த ஆண்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் மன்மதன் மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் அட்டகாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த வருடம் வெளியான மன்மதன் திரைப்படம் சிம்புவிற்கு ரசிகர்களை அள்ளிக் கொடுத்தது. இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றன.
2005:
நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்ட அந்த வருடம் விஜய்யின் சிவகாசி மற்றும் சேரனின் தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றது.
2006:
அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி அன்று வெளியான அஜித்தின் வரலாறு மற்றும் ஜீவாவின் ஈ படங்கள் வெளியாகின. வித்தியாசமான தோற்றத்தில் அஜித் நடித்த வரலாறு திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
2007:
தீபாவளி தினமான நவம்பர் 9ம் தேதி சூர்யாவின் வேலு மற்றும் தனுஷின் பொல்லாதவன் படங்கள் வெளியாகின. இரட்டை வேடத்தில் கிராமத்து பின்னணியில் சூர்யா நடித்த வேலு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷின் பொல்லாதவன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று தனுஷிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
2008:
அக்டோபர் 28ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட்ட இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இந்த வருடம் வெளியாகிய அஜித்தின் ஏகன் மற்றும் பாரத்தின் சேவல் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.
2009:
அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட இந்த வருடம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இந்த ஆண்டு வெளியாகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய பேராண்மை மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகி ஆதவன் என இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது.
2010:
நவம்பர் 5ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட்ட இந்த வருடம் வெளியாகிய தனுஷின் உத்தமபுத்திரன் மற்றும் விதார்த்தின் மைனா திரைப்படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன.
2011:
அக்டோபர் 26 ஆம் தேதி வெளியான விஜயின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின. இருப்பினும் வசூலில் சாதனை படைத்து இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.
2012:
நவம்பர் 13ம் தேதி தீபாவளி கொண்டாடப் பட்ட இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளியாக அமைந்தது. தளபதி விஜய் தனி ஆளாய் களமிறங்கினார் அவர் நடிப்பில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை முறியடித்தது.
2013:
இந்த வருடம் நவம்பர் மூன்றாம் தேதி அஜித்தின் ஆரம்பம் மற்றும் விஷாலின் பாண்டிய நாடு படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்று ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
2014:
அக்டோபர் 23ஆம் தேதி கொண்டாடப்பட்ட இந்த வருடமும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளியாக அமைந்தது. துப்பாக்கி திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியாகிய மற்றொரு திரைப்படமான பூஜை அந்தளவிற்கு சொல்லும்படியாக இல்லை.
2015:
நவம்பர் 11ஆம் தேதி வெளியாகிய கமலின் தூங்காவனம் மற்றும் அஜித்தின் வேதாளம் பெருமளவில் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை. இருப்பினும் அஜித் மற்றும் கமலுக்காக படங்கள் சில நாட்கள் திரையரங்குகளில் ஓடின.
2016:
அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகிய தனுஷின் கொடி மற்றும் கார்த்தியின் கஷ்மோரா படங்கள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. இரட்டை வேடத்தில் தனுஷ் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான கதையம்சத்துடன் அமைந்த காஷ்மோரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
2017:
அக்டோபர் 18-ம் தேதி கொண்டாடப்பட்ட இந்த வருடம் விஜய்யின் மெர்சல் சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் பாகம் 2 மற்றும் மேயாத மான் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
2018:
நவம்பர் 6ம் தேதி இந்த வருடம் கொண்டாடப்படும் தீபாவளிக்கு சர்க்கார் மற்றும் பில்லா பாண்டி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதனால் எந்தவித போட்டியும் இன்றி விஜயின் சர்க்கார் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் சர்க்கார் தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.