தளபதியின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு செம ஸ்மார்ட்டாக டிக்டாக் செய்த முகேன்! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ!
mugen tiktok in vijay kutty story song
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டு பிக்பாஸ் பட்டத்தை வென்றவர் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன் ராவ். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்ட முகேனுக்கெனவே ஏராளமான தமிழ் ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர்கள் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.தனது சிறுவயதிலிருந்து ஏராளமான கஷ்டங்களை சந்தித்த முகேன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றபிறகு பல முன்னேற்றங்களை கண்டார். சமீபத்தில், இவரது தந்தை இறந்த விஷயம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அதற்கு பிக்பாஸ் முகேன் டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.