பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக துழைந்த பெண்.! உச்சகட்ட உற்சாகத்தில் துள்ளிக்குதித்த போட்டியாளர்.! வீடியோ இதோ..
muken mother and sister guest in bigboss
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறினார். அதன்பின்னர் பிக்பாஸ் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நேற்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று லாஸ்லியா வீட்டின் தலைவரானார். பின்னர் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்னனர். அதில், கடந்த வாரம் டாஸ்க் சரியாக செய்யாததால் கவின் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அனைத்து போட்டியாளர்களும் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். மேலும் தர்ஷன், ஷெரின், சாண்டி ஆகியோரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று freeze டாஸ்க் நடைபெறுகிறது. அப்பொழுது முகேனின், தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். இதைக் கண்ட முகென் உற்சாகத்தில் ஓடிடென்று தனது தாயை கட்டியணைத்து கண்ணீர் வடித்து அவரை தூக்கியுள்ளார். அதன் பின் தங்கையை கண்டதும் உச்சகட்ட சந்தோஷத்தில் அவரை தூக்கி ஓடி செல்கிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி பார்போரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.