பாடகி சின்மயி தான் வைரமுத்துவுக்கு அதை பலமுறை செய்தார்!. உண்மையை போட்டுடைத்த இசையமைப்பாளர!.
music director talk about chinmayi and vairamuthu
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் எனப் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது.
இதுகுறித்து சின்மயியியை சுவிட்சர்லாந்திற்கு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்ற இசையமைப்பாளர் இனியவன் பரபரப்பாக பேசியுள்ளார்.
சின்மயி வானத்தை பார்த்துக்கொண்டு எச்சியை துப்புகிறார், இதில் அவருக்கு தான் ஆபத்து, வைரமுத்துவுக்கு இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என இசையமைப்பாளர் இனியவன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இனியவன் கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காத போது, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆச்சரியமாக உள்ளது.
நிகழ்ச்சி முடிந்தபின்னர் வைமுத்து தனது வீட்டுக்கு புறப்பட்டுவிட்டார். சுவிஸில் பேசிய பணத்தை விட இரண்டு மடங்கு பணம் வேண்டும் என்று சின்மயியின் அம்மா சண்டை போட்டார்.
இதற்கு, நாங்கள் தான் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மனவேதனையடைந்தார்.
2012 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு வைரமுத்து அவர்கள் வரிகளில் சின்மயி பாடவிருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் போன் செய்து, என்னால் வர இயலாது, எனது அம்மா வேறு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என கூறிவிட்டார்.
இதனால், வேறு ஒரு பாடகியை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இதனால் வைரமுத்து அவர்கள், சின்மயி மீது சற்று கோபப்பட்டார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் பேச்சுவார்த்தை இல்லை.
பிறகு, சின்மயியின் திருமணத்திற்கு சகோதரர் தான் தான், விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்று கூறப்பட்ட தகவல் பொய்யானது. சின்மயி பலமுறை வைரமுத்து அவர்களுக்கு போன் செய்து , 3 நாட்கள் காத்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், இனிமேல் சின்மயி போன்ற பெண்களை பாட அழைத்தால், நிகழ்ச்சி முடிந்த பின்னர், நான் எப்படி வந்தேன், எப்படி போகிறேன் என எழுதிவாங்க வேண்டும்.
ஏனெனில், கையைபிடித்து இழுத்துவிட்டார்கள் என்று புகார் அளித்துவிட்டால் என்ன செய்வது என கூறியுள்ளார்.