என் கலையும் கடமையும்.! விமர்சனங்களுக்கு நச் பதில் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ்.!
என் கலையும் கடமையும்.! விமர்சனங்களுக்கு நச் பதில் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ்.!
திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அந்த பகுதியில் இருக்கக்கூடிய நீர் நிலைகள் நிரம்பியதோடு குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்து கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும், அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் தான், திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எப்படியாவது காப்பாத்துங்க, என்று பதிவிட்டதோடு நின்று விடாமல், களத்திலிறங்கி தன்னுடைய சொந்த கிராம மக்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மாரி செல்வராஜை பலர் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த சூழ்நிலையில் தான் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், 'என் கலையும், கடமையும் நான் யாரென்று நிரூபிப்பதற்காக அல்ல, நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது' என கூறியிருக்கின்றார்.