தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!

கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!

Nag Ashwin about Kalki 2898 AD Part 2  Advertisement

வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், கடந்த ஜூன் 2024ல், நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கல்கி ஏடி 2898. இதிகாசங்கள் எனப்படும் மகாபாரத கதையை மைப்படுத்தி, கிருஷ்ணரின் கல்கி அவதாரம் எதிர்காலத்தில் எவ்வாறான சூழ்நிலையில் வர வாய்ப்புள்ளது என கற்பனையாக உருவாகிய படம், உலகளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது.

ரூ 1100+ கோடி வசூல்

ரூ.600 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், ரூ.1100 கோடி கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது. படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பாதணி, பசுபதி உட்பட பலரும் படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் ஒஜி சம்பவம் பாடல்; லிங்க் உள்ளே.!

cinema

இரண்டாவது பாகம்

தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் மட்டுமல்லாது பல மொழியிலும் வெளியானது. ஐமேக்ஸ், 3டி, 4டிஎக்ஸ் ஆகிய உலகத்தரத்தில் படம் வெளியாகியது. இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் குறித்து, இயக்குனர் நாக் அஸ்வின் பிரத்தியேக தகவலை நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.

2025ம் ஆண்டின் இறுதியில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், முதல் பாகத்தில் குறைந்த நேரத்தில் தோன்றிய பிரபாஸ், இரண்டாவது பாகத்தில் பெரும்பாலும் இப்பார். அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படம் இருக்கும் எனவும் நாக் அஸ்வின் கூறினார். இதனால் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Nag Ashwin #Kalki movie #Kalki 2898 AD #Prabhas #கல்கி 2898 ஏடி #நாக் அஸ்வின்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story