வாவ்! தனது குட்டி தேவதையை கையில் ஏந்தியவாறு... முதன்முதலாக நடிகர் நகுல் வெளியிட்ட செம கியூட் புகைப்படம்!
Nagul post image with her daughter
தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது சுனைனாவுடன் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.
நடிகர் நகுல், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார். அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அன்பான ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகர் நகுல், தற்போது தனது அழகிய மகளை கையில் ஏந்தியவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, இப்படி ஒரு குட்டி இளவரசியை கொடுத்த தனது மனைவிக்கு நன்றி கூறி மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கியூட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.