8 மாசமா?. நம்பவே முடியல.. விஜய் டிவி சீரியல் நடிகையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
8 மாசமா?. நம்பவே முடியல.. விஜய் டிவி சீரியல் நடிகையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
கோலிவூட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான "சேட்டை" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நட்சத்திர நாகேஷ். இவர் இதன் பின் இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் போன்ற சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது வஞ்சகன் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சன் சிங்கர் மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற இவர், லக்ஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி, வாணி ராணி போன்ற நெடுந்தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஏராளமான வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நட்சத்திரா நடித்து வருகிறார். எப்பொழுதும் தனது சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "எங்களுக்கு திருமணம் நடைபெற்று 8 மாதமாகிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தேங்க்யூ ராகவ்" என்று எழுதியுள்ளார் இதனை கண்ட நெட்டிசன்கள் 8 மாசமா? நம்பவே முடியல என்று கூறி வருகின்றனர்.