×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் பிரபலத்துடன் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து.. என்ன இது! நடிகை நமீதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!

நடிகை நமீதா காதல் சந்தியாவிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அது வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவர் பல படங்களில் தனது அளவில்லாத கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். 

 கொஞ்சும் தமிழில் இவர் கூறும் மச்சான்ஸ் என்ற ஒரு வார்த்தைக்கே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதனைத்தொடர்ந்து நாளடைவில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பின்னர் 2017 ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்தநிலையில் நடிகை நமீதா காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சந்தியாவை அண்மையில் சந்தித்துள்ளார். அப்பொழுது அவரை கட்டியணைத்து, முத்தமிட்டு ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளார். இத்தகைய புகைப்படத்தை நமீதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது. மேலும் பலரும் அவர்கள் கொடுத்த போஸை பார்த்து என்ன கொடுமைடா இது என கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kadhal Sandhiya #nameetha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story