மைனா நந்தினியின் தம்பிய பாத்துருக்கீங்களா..? இந்த சீரியல் அவர் நடிக்கிறாராம்.. வைரல் புகைப்படம்..
விஜய் டிவி புகழ் நடிகை மைனா நந்தினியின் தம்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவி புகழ் நடிகை மைனா நந்தினியின் தம்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி மைனா. இந்த தொடரில் இவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமாக்கியது.
கடந்த ஆண்டு நந்தினி_யோகேஸ்க்கு திருமணம் முடிந்தது. இப்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் நந்தினி மைனாவின் தம்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது மைனாவின் தம்பியும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இப்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அன்புடன் குஷி சீரியலில் பிரஜனின் நண்பனாக மைக்கேல் என்னும் பாத்திரத்தில் நடிப்பவர் மைனா நந்தினியின் சொந்தத் தம்பி. இதோ அவரது புகைப்படம்.