வாவ்!! நந்தினி மைனா மகன் எப்படி வளர்ந்துட்டார் பாருங்க!! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..
விஜய் விஜய் டிவி புகழ் மைனா நந்தினியின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் விஜய் டிவி புகழ் மைனா நந்தினியின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பலரில் ஒருவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மைனா நந்தினி எனவே அடையாளம் காணப்படுகிறார்.
சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள நந்தினி மைனா, பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து சில நாட்களில் குழந்தையின் புகைப்படத்தை நந்தினி மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது அவர்களின் குழந்தை நன்கு வளர்ந்துவிட்ட புகைப்படம் ஒன்றை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளநிலையில், ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு வருகின்றனர்.