Nandhivarman Trailer: சோழர்களைத்தொடர்ந்து பல்லவர்களின் வரலாற்றை தேடிப்போகும் நந்திவர்மன்: அசத்தல் ட்ரைலர் காட்சிகள் இதோ.!
#Breaking: அட்டகாசமான தெறிக்கவிடும் காட்சிகள்; வெளியானது நந்திவர்மன் படத்தின் டிரைலர்..!
ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில், சுரேஷ் ரவி ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஜெஎஸ்கே கோபி, முல்லை கோதண்டம் உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் நந்திவர்மன்.
இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. மதன் கார்த்திக் வரிகளில் உருவான பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சோழர்களின் வரலாற்றை தொடர்ந்து, பல்லவ மன்னரின் வரலாற்றை எளிமையாக இக்காலத்துடன் தொடர்புபடுத்தி கூறும் திரைப்படமாக நந்திவர்மன் அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியகியுள்ளது. அக்கட்சிகள் உங்களின் பார்வைக்கு.,